Categories: சினிமா

அந்த நடிகரின் திருமணத்தின் போது அழுதேன்… அவர் எப்படி அப்படி செய்யலாம் –நடிகை சோனா பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் திடீரென கவர்ச்சிப் பாதைக்குத் தாவினார்.

இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். இடையில் பாடகர் எஸ் பி பி சரண், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக இவர் புகார் அளிக்க தமிழ் சினிமா உலகில் பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் அந்த பிரச்சனை அடங்க, சோனாவும் ஒரு கட்டத்தில் காணாமல் போனார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து ‘ஸ்மோக்’ என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். அது சம்மந்தமாக சில நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். அதில் தான் ஏன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானேன் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் தன்னுடைய இளமைப் பருவ நாட்களையும் அப்போது தனக்குப் பிடித்த நடிகர்கள் பற்றியும் பேசியுள்ளார். அதில் “எனக்கு கமல்ஹாசன், அமீர்கான் ஆகியோரை மிகவும் பிடிக்கும். அவர்கள்தான் என் கிரஷ். அமீர்கான் முதல் முறையாக திருமணம் செய்துகொண்ட போது நான் அழுதேன். அவர் எப்படி என்னை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம் என வீட்டில் உள்ளவர்களிடம் அழுவேன். அப்போது எனக்கு 14 அல்லது 15 வயது இருக்கும்.

நான் சினிமாவுக்கு வந்த பின்னர் எனக்குப் பிடித்த நடிகர்களை எல்லாம் பார்த்துவிட்டேன். ஆனால் இன்னும் அமீர்கானை மட்டும் பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago