#image_title
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இவர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தற்பொழுது இவர் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ் ஆகியோர் நடித்த ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமின்றி ‘The Eye’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசன், ‘தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக’ மனம் திறந்து கூறியுள்ளார்.
அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘என் வாழ்நாளில் 8 ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன். ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாட்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்’ என்று ஓப்பனாக பேசியுள்ளார்.
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…