சென்னையின் முக்கிய இடங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டிய தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் ஆதரவு அளித்துள்ளது. அதனைப் போலவே நடிகை சனம் ஷெட்டி போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளார். பத்து நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் இதுவரை ஏழு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில் தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் களத்தில் இறங்கிய நடிகை சனம் ஷெட்டி, அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுவையில், அரசாங்கத்திற்கு அசிங்கமாக இருக்க வேண்டும். பத்து நாட்களாக போராடுகிறார்கள். என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல் அப்படியே விட்டுட்டாங்க. கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிர் மற்றும் குடும்பத்தை கூட பார்க்காமல் எங்களுக்காக வந்து நின்றார்கள். தெரு தெருவாக வந்து சுத்தம் செய்தவர்கள் என் நண்பர்கள். இவர்களுக்காக குரல் கொடுப்பது என்னுடைய கடமை. எனக்கே இருக்கும்போது இந்த அரசாங்கத்திற்கு ஏன் இல்லை? உங்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்தார்கள். ஆனால் அதை கண்டுக்காமல் இன்னும் எத்தனை நாட்கள் தான் இவர்களை வைத்திருப்பீர்கள்.
சென்னை மேயர் பிரியா வராங்க செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க. ஆனா தீர்வு கிடைக்கல. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தான் கேட்கிறார்கள். அதையே நீங்கள் செய்ய வில்லை, உங்கள் நேரம் முடிய போகுது, இனிமே எப்படி ஓட்டு கேட்டு வருவீங்க என்று தெரியல. மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் நீங்கள் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன. மக்கள் தேவை தான் முக்கியம். அதை விட்டுவிட்டு சிலையெல்லாம் உங்களை யார் கேட்டது. அமைச்சர் நேரு நீங்கள் உயிருடன் தான் இருக்கீங்களா. தயவுசெய்து இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் ப்ளீஸ் என்று நடிகை உருக்கமாக பேசியுள்ளார்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…