தமிழில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சமீரா ரெட்டி. இவருடைய சகோதரிகள் மாடலிங் துறையிலும் VJ துறையிலும் செயல்பட்டு வந்த நிலையில் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் வசுந்தரா தாசுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது சமீரா ரெட்டி தான்.
ஆனால் அப்போது பாலிவுட் படத்தில் கமிட் ஆனதால் அவர் சிட்டிசன் படத்தை தவிர்த்து விட்டார். ஹிந்தி திரைப்படம் ஒன்றில் 2002 ஆம் ஆண்டு ஹீரோயினியாக அறிமுகமான சமீரா ரெட்டி தெலுங்கு, வங்காள மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலமாக 2008 ஆம் ஆண்டு தான் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.
தனது முதல் திரைப்படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு அஜித் பாவனா நடிப்பில் வெளியான அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி மற்றும் வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தற்போது துபாயில் சமீரா ரெட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். சினிமாவை விட்டு விலகினாலும் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமீரா ரெட்டி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமீரா ரெட்டிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா என கேட்டு வருகிறார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…