Categories: CINEMA

அடேங்கப்பா… சமந்தா-க்கு இவ்ளோ வயசாகிடுச்சா…? இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரின் சொத்து மதிப்பு இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன்இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.

இதைத்தொடர்ந்து நடிகர் அதர்வாக்கு  ஜோடியாக பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி,  தெறி, மெர்சல் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது PAN இந்திய நடிகையாக மாறியுள்ளார் சமந்தா.

#image_title

இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது நடிகை சமந்தா நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டு விட்டு மயோசிட்டிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.

#image_title

நடிகை சமந்தா , நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதும் நாம் அறிந்ததே. இதைத்தொடர்ந்து இருவரும் இரண்டாவது திருமணம் முடிக்க இருப்பதாகவும் இணையத்தில் அவ்வப்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், தனது திறமையான நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராகவே வலம் வந்து கொண்டுள்ளார். சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப்பறந்து வருகிறார் நடிகை சமந்தா.

அவர் கடந்த 2020-ம் ஆண்டு சாஹி என்கிற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். இதுமட்டுமின்றி பல்வேறு பிஸினஸ்களிலும் முதலீடு செய்து சக்ஸஸ்புல் women ஆக சினிமாவிலும், பிசினஸிலும் கலக்கி வருகிறது.  இந்நிலையில் நடிகை சமந்தா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது அவரின் சொத்து மதிப்பு  ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

#image_title

அவருக்கு சொந்தமாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு வீடுகளும், ஆடம்பர பங்களாக்களும் உள்ளது.   இதுமட்டுமின்றி கார் பிரியரான அவரிடம்  லேண்ட் ரோவர், போர்ச், ஆடி, ஜாகுவார் போன்ற சொகுசு கார்களும் உள்ளன. தற்பொழுது இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள்  வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Begam

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

14 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

14 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

15 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

16 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

17 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

17 hours ago