ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா .. நடந்தது என்ன ..? அதிர்ச்சியில் ரசிகர்கள் ..

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா; இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை சமந்தாவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2007 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி வர்மன்  இயக்கத்தில் உருவான “மாஸ்கோ காவேரி” திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். இதனை அடுத்து பல படங்களை நடித்து  வெற்றி படங்களாக மாற்றியுள்ளார். சினிமா துறையில் நல்ல மார்க்கெட்டிங் கொண்ட நடிகையாக  முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடி கட்டி பறந்தார்.

அதன் பின்னர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் மகனான நாக சைதன்யாவை காதலித்து  2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர்,  2021 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்வில் இருந்து பிரிந்தார்கள். மேலும், திடீரென அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு வர சில மாதங்கள் ஓய்வெடுத்து சிகிச்சை மேற்கொண்டார்.

இனிமேல், நடிகை சமந்தாவால் எழுந்து நடமாடக் கூட முடியாது என வதந்திகள் பரவின. ஆனால், அனைத்தையும் முறியடித்து விட்டு மீண்டும் சினிமா மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்களில் தீவிரமாக நடித்து வருகிறார் சமந்தா. இதனாலே இவரை சாதனை பெண்மணி என்று  சினியுலகில் கூறுகிறார்கள். தற்போது,   ராஜ் & DK இயக்கத்தில் உருவான ‘பேமிலி மேன்’ என்ற வெப்சீரிஸில் நடித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து,  மீண்டும் அவர்கள் இயக்கத்தில் வெப் சீரியஸில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. இவரால் அரை மணி நேரம் கூட ஒழுங்காக நிற்க முடியாத சூழ்நிலையில் இருந்த போதிலும் இந்த வெப் சீரியஸில் டூப் போடாமல் பைட் சீன்  செய்து முடித்தார். மேலும்  அந்த சீனை முடித்த அடுத்த கணமே அப்படியே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். சமந்தாவை  பட குழுவினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

58 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

1 மணத்தியாலம் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

3 மணத்தியாலங்கள் ago