#image_title
மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் சாய்பல்லவி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். சாய் பல்லவியின் சொந்த ஊர் ஊட்டி அருகே இருக்கும் கோத்தகிரி. இவர் படித்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.
#image_title
தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நேரம் தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து தண்டல் திரைப்படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
மேலும் பாலிவட்டில் சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார்.
இவர் ஏஎல் விஜய் இயக்கிய சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜா கண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இன்று பூஜா கண்ணனுக்கும் அவரது காதலர் வினீத்துக்கும் கோத்தகிரி படுகர் இன பாரம்பரிய முறைப்படி சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது.
திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#image_title
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…