தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் மாரி 2 திரைப்பட பாடலான ரவுடி பேபி பாடல் இன்றும் தனி இடத்தை பிடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் – தீ பாடிய இந்தப் பாடல் கடந்த 2019 ஆம் ஆண்டு youtubeல் பல சாதனைகளை முறியடித்து இருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட மாரி படத்தின் இரண்டாம் பாகமாக பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு மாரி 2 திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தின் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திலும் தனுசுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யுவன் சங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
படத்தின் முதல் சிங்கிளாக 2018 அக்டோபர் 25ஆம் தேதி ரவுடி பேபி பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 2019 ஜனவரியில் யூட்யூபில் வெளியான இந்த பாடல் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பல சாதனைகளைப் படைத்தது. தென்னிந்திய அளவில் முதல் முறையாக யூடியூபில் 150 கோடி பார்வையாளர்களைக் கடந்த முதல் பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் படைத்தது.
பாடலின் ஒளிப்பதிவும் அதில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடனமும் வெகுவாக பாராட்டப்பட்டது. ரவுடி பேபி பாடல் ஷூட்டிங் நடைபெறுவதற்கு முன்னதாக பிரபுதேவா கொடுத்த நடன அசைவுகளை நான்கு நாட்களாக சாய் பல்லவி பயிற்சி செய்துள்ளார். பிறகு சூட்டிங் நடைபெற்ற நாளில் நடன அசைவுகளை முழுமையாக பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு வந்த நிலையில் அங்கு சில நடன அசைவுகளை பிரபுதேவா மாற்றி உள்ளார்.
அதில் சாய்பல்லவி இரண்டு மூன்று டேக்குகள் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையே இழந்த சாய் பல்லவி தன்னால் முடியுமா என்று நினைத்து அழுதுவிட்டார். பிறகு பிரபு தேவா அவரை சமாதானப்படுத்தி ஆடவைத்த நிலையில் இன்றளவும் சாய் பல்லவியின் சிறப்பான நடனம் இடம்பெற்ற பாடல்களில் ரவுடி பேபி பாடல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…
நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…