Categories: சினிமா

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த நடிகைகள் யார் யார்..? திரைக்குப் பின்னால் கேப்டனுக்கு நடந்த அரசியல்..

Spread the love

நடிகர் விஜயகாந்த். கடந்த 28-ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் அதிகம் ஒலிக்கும் ஒரு பெயர். ஏனெனில் இனி அவரை நாம் நேரில் எங்குமே பார்க்க முடியாது. திரையில் மட்டுமே அவரை காண முடியும் என்பதால், அவரைப் பற்றிய பழைய நினைவுகள் சமூக வலைதங்களில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக அவரது திரை வாழ்க்கையில் என்னமாதிரியான சவால்களை அவர் மேற்கொண்டார், அவரது பிளாக் பஸ்டர் படங்கள், போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் என பலவற்றையும் நாம் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், அவருடன் நடிக்க மறுத்த 5 நடிகைகள் மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title

இது குறித்து அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் மக்கள் கேப்டனை ஹீரோவாக ஏற்றுக் கொண்டாலும், அவருடன் நடிப்பதற்கு கதாநாயகிகள் ஒத்துக் கொள்ளவே இல்லை. கதை பிடித்து, சம்பளம் ஓகே ஆன பின்பு ஹீரோ விஜயகாந்த் தான் என தெரிந்தால் உடனே அய்யய்யோ அந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிடுவார்களாம்.ஒரு முறை நடிகை ஸ்ரீபிரியாவுடன் விஜயகாந்த் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்திருக்கிறது. பட குழு மொத்தமும் ஊட்டிக்கு சென்ற பின்பு, ஸ்ரீ பிரியா மட்டும் வரவே இல்லை. காரணம் கேட்டு கேப்டன் அதிர்ந்து போய் இருக்கிறார். விஜயகாந்த் உடன் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி ஸ்ரீபிரியா பாதியிலேயே அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

நடிகைகள் ராதிகா, ஸ்ரீதேவி, சரிதா, அம்பிகா, ராதா ஆகியோர் கூட விஜயகாந்த் உடன் நடிக்க முதலில் ஒத்துக் கொள்ளாதவர்கள். இதில் சரிதாவுக்கு விஜயகாந்த் உடன் நடிக்க பிடிக்கவில்லை என எப்படி கேப்டனிடம் சொல்லப்பட்டதோ, அதேபோன்று சரிதாவிடம் விஜயகாந்த் உங்களுடன் நடிப்பதற்கு மறுத்துவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு விஜயகாந்த் சரிதா வீட்டிற்கே நேரடியாக சென்று உண்மையை சொல்லி இருக்கிறார்.

#image_title

உண்மையில் இந்த நடிகைகள் எல்லாம் விஜயகாந்துடன் நடிக்க மறுத்ததற்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி நடந்து இருக்கிறது. அவர்கள் நடிப்பதற்கு ஓகே சொன்னாலும், அய்யய்யோ விஜயகாந்துடன் படம் பண்ணாதீர்கள், உங்கள் கேரியரே முடிந்துவிடும், பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ண அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காது என அந்த நடிகைகள் மிரட்டப்பட்டதாக கேப்டன் சொல்லி இருக்கிறார்.

அதேபோன்று விஜயகாந்தை ஒரு படத்தில் புக் செய்து நான்கு நாட்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு அதை அப்படியே நிறுத்தி விடுவார்களாம். விஜயகாந்த்திற்கு நடிக்க வரவில்லை, அதனால் தான் அந்த படம் கைவிடப்பட்டது என்று சொல்வதற்காக தான் இந்த நாடகம் கூட நடந்து இருக்கிறது. எப்படியாவது கேப்டனை சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என மிகப் பெரிய அரசியல் கோலிவுட்ல நடந்து இருப்பதாக பேசப்படுகிறது.

Archana

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago