தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.
வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர் ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சீரியல்களை இயக்கி தயாரித்து வருகிறார் . தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார் நடிகை ராதிகா.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதிகா. இவர் இன்றுடன் தனது திரைவாழ்க்கையில் 45 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…