#image_title
நடிகை ப்ரியா கில். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு ரன்னர்-அப் ஆனார்.இதனை தொடர்ந்து 1996-ம் ஆண்டு ஹிந்தியில் தேறி மேரி சப்னே என்ற படத்தில் ஹீரோயினாக சினிமாவில் நுழைந்தார். தமிழில், 2002-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் ஒல்லிகுச்சி ஒடம்புக்காரியாக நடித்தார். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த படமே அவருக்கு முதல் மற்றும் கடைசி தமிழ் படமாக அமைந்து விட்டது.
பிறகு, தெலுங்கு, ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்தார். இறுதியாக, 2006-ம் ஆண்டு பைரவி என்ற படத்தில் நடித்தார். அது தான் அவரது கடைசி திரைப்படம். 90களில் ஷாருக்,சல்மான் போன்ற கான்களுடன் ஜோடியான ப்ரியா கில் படிப்படியாக தனது நிலையில் இருந்து இறங்கி துணை நடிகை என்ற இடத்திற்கு வந்தார். ஒரு கட்டத்தில், ஹிந்தி சினிமா கையை விரித்து விடவே, போஜ்புரி சினிமா பக்கம் கரை ஒதுங்க வேண்டிய கட்டாயம் அவரது வாழ்வில் ஏற்பட்டது. முதலில், பாலிவுட் ஹீரோயின் என்று வரவேற்ற போஜ்புரி சினிமா அவருக்கு நிலையான வாழ்கையை தரவில்லை.
2006-ம் ஆண்டுக்கு பிறகு சினிமா வாய்ப்பில்லாமல், அவல நிலைக்குக்கு தள்ளபாட்டார். பட வாய்பை தேடி சுற்றி வந்த அவர் பிறகு என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்ற எந்த விபரமும் இல்லாமல் இருந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். சில திரைப்படங்களில் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால், இவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டார்.
தற்போது 49 வயதாகியும் இன்னமும் அதே இளமையோடு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தாம்’ வெப் தொடர் நடிகர் ரவி சேகரை காதலித்து ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கோரியிருந்தார். பிரியா கில்லுக்கு ஏற்கனவே மகள் ஒருவர் உள்ள நிலையில் ரவி சேகருக்கு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…