தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் நடிப்பில் 2003ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஜே.ஜே . இத்திரைப்படம் நடிகர் மாதவனுக்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சரண் இயக்கிய இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பிரியங்கா கோத்தாரி நடித்து இருந்தனர்.
இதில் மாதவனை கரம் பிடிக்கும் நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா. இவர் 1983ல் உத்திரபிரதேசத்தில் பிறந்தவர். நடிப்பிற்கு வரும் முன்னர் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழில் நடிகர் மாதவனுடன் ஜே.ஜே. படத்தில் இணைந்து நடித்தார். இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு குவியத் தொடங்கியது. பாலிவுட்டில் ‘சர்ச்சை’ படங்களில் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18+ படத்தில் நடித்தார். அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைய, 2010ல் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.பின்னர் டெல்லியை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் திருமணம் செய்து செட்டில் ஆகி நடிப்புக்கு குட் பை சொல்லி விட்டார். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். தற்பொழுது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…