சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி. மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். டிவி ஷோக்கள் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கின்றார். இதன் மூலமாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகிகளுக்கு தங்கை உள்ளிட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தியிருந்தார். அதில் இவரும் புகழும் செய்யும் லூட்டி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. பின்னர் நாய் சேகர் என்கின்ற திரைப்படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பவித்ரா லட்சுமி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
இந்த நிலையில் பவித்ரா லட்சுமி கடைசியாக வெளியிட்ட வீடியோவில் , அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காணொளியை பார்த்த பலரும், அவருக்கு என்ன ஆச்சு? இவரது முகம் எவ்வளவு மாறிவிட்டது என பலவிதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். தற்போது அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…