Categories: சினிமா

சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த அஜித் பட நடிகை பார்வதி நாயர்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Spread the love

மலையாளத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பாப்பின்ஸ் என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பார்வதி நாயர். மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தமிழில் அறிமுகமானதும் அவர் நடித்த முதல் திரைப்படமே அஜித் படம் தான். அதாவது அஜித் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

பார்வதி நாயரின் குடும்பம் முழுவதும் துபாயில் உள்ளது. இவருடைய சகோதரர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் செலக்டராக பணியாற்றியுள்ளார். பார்வதியின் தந்தையும் துபாயில் பெரிய தொழிலதிபராக உள்ளார். அவருடைய தாய் ஒரு கல்லூரி பேராசிரியை. தனது பள்ளி படிப்பை அபுதாபியில் முடித்த பார்வதி நாயர் பிறகு இந்தியா வந்து கல்லூரி படிப்பை கர்நாடகாவில் முடித்தார். படித்து முடித்த கையோடு மாடலிங் துறையில் கலக்கி வந்த பார்வதி நாயர் மிஸ் கர்நாடகா அழகி போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலும் வென்றார்.

இதனைத் தொடர்ந்து மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் பார்வதி நாயர் நியமிக்கப்பட்டார். தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கமல்ஹாசன் உடன் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வருகின்றார்.

குறிப்பாக இந்தியில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 83 என்ற திரைப்படத்தில் கவாஸ்கர் மனைவி கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது ‘ஆலம்பனா’ என்கிற திரைப்படம் இவருடைய நடிப்பில் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் பார்வதி ஞாயருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

5 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

5 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

5 மணத்தியாலங்கள் ago