தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி திருவோத்து. இவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனுசு உடன் மரியான், உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மலையாள மொழியில் நிறைய படங்களில் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக பெண்ணுரிமை, அரசியல் மற்றும் சமத்துவம் போன்ற துணிச்சலான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். இவருடைய நடிப்புக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட இவர் 15 வருடங்களுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தின் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில், நான் டேட்டிங் ஆப்பில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். அடிக்கடி அதில் நல்ல பசங்கள் இருக்கிறார்களா என்று தேடிப் பார்ப்பேன். ஆனால் இது போன்ற டேட்டிங் ஆப்பில் காதல் செய்வதில் எனக்கு விருப்பம் கிடையாது.
ஒருவரை காதலிப்பதற்கு முன்பு அவர் பற்றி நன்கு தெரிந்து ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி தானாக நடக்கும் காதல்தான் எனக்கு பிடித்திருக்கு. பல வருடங்களுக்கு முன்பு நான் ஒருவரை காதலித்தேன். எனக்கு இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை என்னுடைய முன்கோபம் மட்டும் தான். அதனால் என்னுடைய காதல் முறிந்தது. அதனால் இனிமேல் காதலிக்கும் முன்பு பலமுறை யோசித்து காதலில் விழ முடிவெடுத்துள்ளேன் என்று பார்வதி திருவோத்து பேசியுள்ளார்.
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…