தமிழ் சினிமாவில் ‘180’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி ,24, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தளபதி விஜயுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது, தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய ரீஎண்ட்ரி என்று அவரே குறிப்பிட்டு இருந்தார்.
நடிகர் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ‘wonder woman’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இதைத்தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அயர்ன் லேடி என்ற படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் ஜோடியாக நடித்தார். நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை நித்யா மேனன் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
இவர் தற்பொழுது தனது அன்பான பாட்டியின் மரணம் குறித்து இணையத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். குட் பை பாட்டி மற்றும் என் செர்ரி மனிதன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…