தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயலாக 90களில் ஒரு காட்டு காட்டியவர் தான் நக்மா. வடக்கிலிருந்து தமிழ் சினிமாவில் தஞ்சமடைந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது. இவர் ரஜினி, கமல், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவருடைய உண்மையான பெயர் நந்திதா மொராஜி. திரை துறைக்காக நக்மா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை பாலிவுட்டில் தான் தொடங்கியிருந்தார். பின் சில படங்கள் ஹிந்தியில் நடித்துவிட்டு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் நக்மா.
2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘காவலன்’. இத்திரைப்படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக், பிரபுதேவா,ரஜினி,நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
மேலும், தென்னிந்திய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் நக்மா இங்கேயே அதிக கவனம் செலுத்த தொடங்கி இருந்தார். அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மா உடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் திரையுலகை விட்டு விலகினார்.
இவர் தற்பொழுது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நக்மா.
இவர் தற்பொழுது கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…