#image_title
நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சிம்புவுடன் சேர்ந்து மேகா ஆகாஷ் வந்த ராஜாவாகத்தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. தனுசுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார்.இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் படம் ரசிகர்களை கவரவில்லை. படத்தில் மேகா ஆகாஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதம் சந்தானம் நடிப்பில் ரிலீசான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படம் ரிலீஸ் ஆகி ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார். விஷ்ணு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் ஆவார். இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மேகா ஆகாஷ் தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டியை செலிபிரேட் செய்துள்ளார். இது தொடர்பான போட்டோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#image_title
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…