#image_title
இயக்குநர் வெங்கட்பிரபு தற்போது இயக்கி வரும் படம் விஜய் 68. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். சிநேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், விடிவி கணேஷ், வைபவ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை பொறுத்த வரை டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்டதாக கூறப்படுகிறது.
முதலில் இந்த படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 க்கு தான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இயன்றவரை படப்பிடிப்பை துரிதமாக நடத்தி முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. லியோ படம் விஜய்க்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக தான் சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதுபற்றிய நேரடியான விமர்சனங்களை விஜய் தெரிந்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில். விஜய் 68 படத்தில் புதிய வரவாக நடிகை மாளவிகா ஷர்மா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல் என்ற படத்தில் ஜீவாவுக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மாளவிகா ஷர்மா, இவானா நடிக்க மறுத்த பள்ளி மாணவி கேரக்டரில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பள்ளி மாணவிக்கான ஒரு ஸ்லிம்மான சின்ன பெண் போன்ற தோற்றத்தில் அவர் இருப்பதால், இவானா கேரக்டரில்தான் இவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் விஜய் 68 படத்தில் புதிய நடிகர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…