தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் பெரும்பாலானோர் கேரள தேசத்திலிருந்து வந்தவர்கள் தான். மலையாள சினிமா கொண்டாட தவறிய நடிகைகள் பலரை தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடியுள்ளது. அப்படி கடவுளின் தேசத்தில் இருந்து வந்த நடிகை ஒருவர்தான் இன்று தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் படங்களை கொடுத்து ஜீரோ பிளாக் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை மாளவிகா மோகனன் தான். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவருக்கு அடையாளம் கொடுத்தது தமிழ் சினிமா தான்.
முதல் படமே ரஜினியுடன் இணைந்து நடித்த நிலையில் சூப்பர் வெற்றி கொடுத்தார். ரஜினியின் பேட்டை திரைப்படம் மூலம் அறிமுகமான இவருக்கு இரண்டாவது படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி இவரை பாலிவுட்டுக்கு கொண்டு சென்றது. அங்கு யுத்ரா உள்ளிட்ட சில படங்களில் கமிட்டான மாளவிகா பிறகு பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இந்த திரைப்படத்தில் ஆரத்தி என்ற ஆதிவாசி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழில் இவர் நடித்து திரையரங்கில் ரிலீஸ் ஆன மூன்று திரைப்படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன. தற்போது இவர் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ராஜா சாப் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இது ஒரு பான் இந்தியா படமாக தயாராகி வருகின்றது. இதனைத் தவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ஒரு படத்திலும் இவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தமிழிலும் சர்தார் 2 திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷூட் நடத்துவதிலும் தொடர்ந்து ஆர்வமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார். இவருடைய கவர்ச்சி தரிசனத்திற்காகவே இன்ஸ்டாகிராமில் 43 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…