இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு இவருடைய நடிப்பு அனைவரையும் அசர வைத்த நிலையில் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.
இறுதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இவர் அந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தற்போது இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோயினியாக மாறியுள்ளார். ஹிந்தியில் யுத்ரா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராஜா சாப் மற்றும் கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இப்படியான நிலையில் மலையாள திரை உலகில் மூத்த முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மோகன்லாலுக்கு ஜோடியாக தற்போது மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மோகன்லாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மாளவிகா மோகனனின் அப்பா கே.யு.மோகனன் ஒரு பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்திலேயே மாளவிகாவின் அம்மாவை ஹீரோயின் போல பிலிம் கேமரா மூலமாக அவர் போட்டோக்கள் எடுத்து இருக்கிறார். அதை எல்லாம் தற்போது மாளவிகா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…