#image_title
லட்சுமி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். இவரது இயற்பெயர் யாரக்குடிபாடி வெங்கட மகாலட்சுமி என்பதாகும். இதை சுருக்கி தான் லட்சுமி என்று இவரை அழைக்கிறார்கள். இவரது தாயார் குமாரி ருக்மணி சினிமாவில் பணியாற்றிய நடிகை ஆவார் மற்றும் இவரது தந்தை யார குடிபாடி வரதராவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், எடிட்டர் என புகழ் பெற்றவர். அதன் மூலம் லட்சுமிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே கிடைத்தது.
1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் லட்சுமி. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக 650 திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இன்றளவும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் லட்சுமி. இவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை.
இது மட்டுமல்லாமல் இன்றைய இளம் நடிகர்களுக்கு அம்மாவாகவும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால், சிவாஜி சாரை நான் சிவாஜி அங்கிள் என்று தான் நான் கூப்பிடுவேன். அவர் ஒரு திறமையான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் அற்புதமான மனிதர் மனித கடவுள் என்று கூறலாம். எல்லோருக்கும் நடிப்பை தன்னை போலவே நடித்து முன்னேற வேண்டும் என்று கற்றுக் கொடுப்பவர். சிவாஜி அங்கிளுக்கு மகளாக, தங்கையாக, மனைவியாக, காதலியாக நடித்த ஒரே நடிகை நான் தான்.
அதேபோல் எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் ஹீரோ புகழ்பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் நிஜத்திலும் ஹீரோ ஒருமுறை நான் அவருடன் ஒரு படத்தில் ஷூட்டிங்கில் இருக்கும் போது அங்கு சில ரவுடிகள் அட்டகாசம் செய்தார்கள். அப்போது படத்தில் ஹீரோ எப்படி சண்டை போடுவாரோ அப்படி இறங்கி சண்டையிட்டதை நான் என் கண்ணால் பார்த்தேன். அதை பார்த்து அசந்து போய்விட்டேன் என்று எம்ஜிஆர் சிவாஜி பற்றி புகழ்ந்து நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார் லட்சுமி.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…