தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் திரையுலகில் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.
அதன்பின் கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார். சுமார் 10 வருடங்களாக கனவு கன்னியாக நீடித்தார்.
இவர் 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
நடிகை கார்த்திகா நாயர் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது. ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார்.
இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ரோஹித் மேனன் காதலித்து வருவதாக கூறப்பட்ட வந்தது. அவருடன் ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்தம் நடந்து முடிந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் நேற்று கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்கின்றனர்.
தற்பொழுது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…