தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன்.
அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கவிஞர் சினேகன் பிரபல நடிகையான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து வாழ்த்து கூறினர்.
பாடலாசிரியர் சினேகனும், வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது திருமணம் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 43 வயதான கவிஞர் சினேகன், 27 வயதான கன்னிகா ரவியைத் திருமணம் செய்து கொண்டது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும் இவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியான தம்பதிகளாக தங்களை விமர்சித்தவர்களின் கண்முன்னே வாழ்ந்து காட்டி வருகின்றனர். இருவருமே சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள். தற்பொழுது கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சினேகனுடன் வயல் வெளியில் சிட்டுக்குருவிகள் போல துள்ளித்திரிந்த அழகிய தருணங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு கண்ணு பட்டுவிடும் என்று சுற்றி போட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர்…
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் (DGE) வெளியிட்டுள்ளது. தேர்வு…
தமிழக அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியில், தற்போது விஜய் தலைமையிலான தவெக-வின் வெற்றியால் பெரும்…
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, தலையில் பெரிய கட்டுடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பெண்…