புது பிசினஸ் தொடங்கிய நடிகை காஜல்… கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிய கணவர்… வைரலாகும் புகைப்படங்கள்….

By Begam

Published on:

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பல மொழிகளிலும் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

   

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சொந்தமாகவும் பல தொழில்கள் செய்து வருகிறார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2020இல் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் உள்ளார். அவருக்கு நீல் என்று பெயர் சூட்டி உள்ளனர். தற்பொழுது பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

இவர் தற்பொழுது கமலஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காஜல் அகர்வால்.

தற்பொழுது இவர் தனது கணவருடன் இணைந்து ‘kajal by kajal ‘என்ற ப்ராடக்ட் ஒன்றை லான்ச் செய்துள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.