தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் விஜய். இந்த பேரும், புகழும் ஒரே நாளிலோ, அல்லது ஒரே படத்திலோ வந்தது இல்லை. பல்வேறு வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என அனைத்தையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் விஜய்.
விஜய்யின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கில்லி. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்று வரை பிரபலம். நடிப்பு, நடனம், நகைச்சுவை என தனது திறைமைகளை பல விதங்களில் நடிகர் விஜய் இந்த படத்தில் காட்டியிருப்பார்.
இத்திரைப்படத்தில் தளபதிக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜானகி சபேஷ். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் குழந்தைகளுக்கான கதை சொல்வது,
தியேட்டர் ஆர்டிஸ்ட், வாய்ஸ் ஓவர் ஆர்ஸ்டிஸ்ட் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.இவர் பெரும்பாலும் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார்.அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இவர்?… இன்னும் அப்படியே இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…