தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிகர் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த நடிகை தனது சிறு வயதில் இருக்கும் பொழுது நடிகர் விஜய் அவரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த நடிகை வேறு யாரும் இல்லை.
தற்பொழுது சின்ன திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹிமா பிந்து என்பவர் தான். அவர் தனது சிறுவயதில் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது. நடிகை ஹிமா பிந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இதற்கு முன்னர் அவர் ‘இதயத்தை திருடாதே’ என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் நடிகர் விஜயுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…