தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் ஏராளம். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படத்தில் மார்க் ஆண்டனியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் ஹேமலதா.
அடுத்து சரத்குமாரின் சூர்யவம்சம் திரைப்படத்தில் ஜூனியர் சக்திவேல் கவுண்டராக நடித்திருப்பார். இதில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க விஜயின் பூவே உனக்காக, பிரசாந்தின் பூமகள் ஊர்வலம், விக்ரமின் சேது, தனுஷின் காதல் கொண்டேன், மதுர, ஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமாரின் சித்தி சீரியலில் பேபி காவேரி ஆகவும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் ராகவி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். பலருக்கும் கனா காணும் காலங்கள் ராகவி என்று சொன்னால்தான் தெரியும்.
அந்த அளவிற்கு அந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து மகள், அன்பே வா, தென்றல் மற்றும் முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் ஹேமலதா நடித்துள்ளார்.
இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் கனா காணும் காலங்கள் தான் இவருக்கு பெயரும் புகழும் தேடி தந்தது. ஹேமலதாவை இன்னும் குட்டி பாப்பா சக்திவேல் கவுண்டராகவே ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஹேமலதா தனது குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…