தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை அக்ஷயா ஹரிகரன். இவர் தெலுங்கில் சத்யா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ரங்கோலி மற்றும் மார்டன் லவ் சென்னை வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துள்ளார். அதனைப் போலவே தமிழில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான சபாநாயகன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
இவர் youtube யிலும் சில நகைச்சுவை தொடர்களில் நடித்து வருகின்றார். இவர் நடிக்க வருவதற்கு முன்பு சென்னை இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். அதன் பிறகு சினிமா மீது இருந்த ஆசையால் ஐடி வேலையை உதறி தள்ளிவிட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க, நீ பார்க்க அழகா தான் இருக்க ஷார்ட் பிலிம் பண்ணு உனக்கு சினிமாவில வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னாங்க. அப்போல இருந்தே நான் சின்ன சின்னதா ஷார்ட் பிலிம் பண்ண.
பிறகு ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் என்ன பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் இருந்து கூப்பிட்டாங்க. எனக்கும் அப்போ வேலை பார்க்கவே சுத்தமா பிடிக்கல. ஏதோ ஒரு சம்பளம் வரட்டும்னு நினைச்சு தான் அங்க வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்க பிரஷர் ரொம்ப அதிகமா இருந்தது. அந்த சமயத்துல தான் எனக்கு வாய்ப்பு வந்தது. அதனால நாம சினிமாவை நோக்கி பயணிக்கலாம் என்று சிந்தித்து அந்த வேலையை விட்டுட்டு வெளியில வந்தேன். அதுக்கப்புறம் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்.
முதலில் நான் வந்ததும் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு சொன்னாங்க. அதுக்காக நிறைய டயட் ஃபாலோ பண்ணி ஜிம்முக்கு எல்லாம் போய் கரெக்டா தூங்கி நிறைய ஒர்க் அவுட் பண்ண. பிறகுதான் சினிமாவில் படிப்படியா வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. கடந்த ஒரு வருஷமா தான் முழுக்க முழுக்க சினிமாவுல கவனம் செலுத்திட்டு இருக்கேன். எங்க அம்மா கூட ஆரம்பத்துல ஐடி வேலையை விட்டுட்டு இப்படி சினிமாவுக்கு போற பார்ட்டிக்கு போயிடுவியான்னு பயந்தாங்க. பிறகு எல்லா நான் பேசி புரிய வச்சிட்டேன். இப்ப முழுக்க முழுக்க சினிமாவுல கவனம் செலுத்திட்டு இருக்க என்று அக்ஷயா ஹரிஹரன் பேசியுள்ளார். இவர் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…