Categories: சினிமா

மலேசியாவில் கேஜிஎப் லுக்கில் மாஸ் காட்டிய நடிகர் யாஷ்… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

Spread the love

பிரபல கன்னட நடிகரான யாஷ் தற்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரை அந்த அளவிற்கு உயர்த்தியது 2018 இல் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

குறிப்பாக இத்திரைப்படம் உலகம் எங்கும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார். இவர் நடிப்பின் மீது கொண்ட தீராத ஆர்வம் காரணமாக காரணமாக 12-ம் வகுப்பு முடித்த கையோடு 300 ரூபாயுடன் பெங்களூருக்கு வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து பல டிராமாக்களில் நடித்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் 2007 இல் ஜம்படா ஹுடுகி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரது திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘மோகினி மனசு’. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதைத் தொடர்ந்து ராக்கி, கல்லற சந்தே, கோகுலா, மோடலசாலா, ராஜதானி என்ற படமும், களவாணி படத்தின் ரீமேக்கான கிரட்டகா, சுந்தரபாண்டியன் ரீமேக்கான   ‘ராஜாஹூளி’ , ‘கஜகேசரி’, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, சந்து  ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’, கே.ஜி.எஃப் 2 என அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இவர் 2016ல் ராதிகா பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது யாஷ் பிரசாந்த் நீள் இயக்கத்தில் கேஜிஎப்3 பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யார் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கே ஜி எஃப் லுக்கில் ரசிகர்கள் சூழ கோலாலம்பூரில் உள்ள உயர் ரக நகையை விற்பனையாக திறப்பு விழாவிற்கு விருந்தினராக அவர் வந்திருந்தார்.

மிகப்பெரிய ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே அவர் மாசாக ஸ்டைலாக நடந்து வந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் அவர் நடந்து வரும்போது பலரும் ராக்கி பாய் ராக்கி பாய் என்று கத்தி கூச்சலிட்டனர்.இது குறித்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Begam

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

34 minutes ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

45 minutes ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

1 மணத்தியாலம் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

1 மணத்தியாலம் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

1 மணத்தியாலம் ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

2 மணத்தியாலங்கள் ago