#image_title
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி வித்தியாசமான தோற்றத்தில் உடலை வருத்திக்கொண்டு விக்ரம் நடித்த படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சேது:
விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு சேது திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பாலா இயக்கினார். இந்த படத்தில் அபிதா, சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சேது படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். சேது படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் சாதாரணமாக நடித்திருந்தாலும், மனநல நோயாளியாக மாறிய பிறகும், மனநல காப்பகத்தில் இருந்து ஓடி வந்த பிறகும் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
காசி:
விக்ரம் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு காசி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கண் தெரியாத ஹீரோவாக விக்ரம் நடித்துள்ளார். காவியா மாதவன் காசியின் மனைவியாக நடித்துள்ளார். மேலும் காவேரி, பார்வதி, தலைவாசல் விஜய், ராஜூ, தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். காசி படம் முழுக்க விக்ரம் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் மெனக்கிட்டுள்ளார். படம் முழுவதும் அப்படி நடிப்பது எளிமையான விஷயம் அல்ல. கருவிழியை மேல்நோக்கி அப்படியே வைத்திருந்து நடிக்க சிரமப்பட்டதாக ஒரு பேட்டியில் விக்ரம் கூறியுள்ளார்.
அந்நியன்:
விக்ரம் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார். சதா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் அம்பி, ரெமோ, அன்னியன் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிளைமாக்ஸ் கட்சியில் பிரகாஷ்ராஜ் அடிக்கும்போது அம்பி, அந்நியன் என அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை மாற்றி இப்படி எந்த நடிகராலும் நடிக்க முடியாது என யோசிக்க வைத்திருப்பார் விக்ரம்.
பிதாமகன்:
கடந்த 2003ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் பிதாமகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பாலா இயக்கினார். விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, ஆகியோர் பிதாமகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. பிதாமகன் திரைப்படத்தில் விக்ரமுக்கு வசனம் குறைவாக இருந்தாலும் அவரது முக பாவனைகள் மூலமாகவே உணர்ச்சிகளை நாம் பார்க்க முடியும். கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவை கொன்ற முதலாளியை கொன்று தனது வெறித்தனமான நடிப்பை விக்ரம் காட்டியிருப்பார்.
ஐ:
கடந்த 2015-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஐ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார். இது விக்ரம் நடித்த ஐம்பதாவது திரைப்படம். எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ஐ திரைப்படத்திற்காக விக்ரம் உடல் எடையை அளவுக்கு அதிகமாக குறைத்து இருப்பார். ஒரு படத்திற்காக ஹீரோ இப்படி எல்லாம் மெனக்கிடுவாரா என விக்ரம் பார்த்து மிரண்டவர்கள் உள்ளனர்.
தங்கலான்:
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்திலும் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து மிரட்டியுள்ளார். பார்வதி, பசுவ்பதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் தனது கெட்டப்பை முழுவதுமாக மாற்றி விட்டார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த கதைக்காக சிரமப்பட்டு முழுமூச்சாக நடித்துள்ளார்
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…