நடிகர் விக்ரமின் தாய் மாமன் இந்த பிரபல நடிகரா?… இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

By Begam

Published on:

‘சீயான் விக்ரம்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் திரையுலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னணி நடிகராக தற்பொழுது வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

   

தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது என பலவிருதுகளுக்கு  சொந்தக்காரரும் ஆவார். ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் சேது, சிறகுகள், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், சாமி, அருள், அந்நியன், பீமா, கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘கோபுரா’. இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் செவன் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விக்ரமின் தாய் மாமனும் ஒரு பிரபல நடிகர் தானாம். யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் தியாகராஜன் அவர்கள் தான். நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நடிகர் விக்ரமும், தியாகராஜன் அவர்களும் குடும்ப பிரச்சினை காரணமாக பேசிக் கொள்வது கிடையாதாம்.