தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள் பலரும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதன்படி ஆரம்பத்தில் அஜித்தின் திரைப்படங்களில் விக்ரம் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது முதலில் விக்ரம் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் அந்த சமயத்தில் ஒரு அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு அஜித் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் சென்று இருந்த நிலையில் அதில் அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அஜித், இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் வருடங்களிலும் சிறந்த நடிகருக்கான விருதை நான்தான் வாங்குவேன் என்று விக்ரமை பார்த்து கூறி அவரை கடுப்பேற்றியுள்ளார். இதனால் எப்படியாவது வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விக்ரம் கடுமையாக போராடி உள்ளார். அன்று அஜித் சொன்ன வார்த்தை விக்ரமுக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால் அதனை மனதில் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் வெறிகொண்டு நடித்தார்.
அப்படி சேது திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நன்றாக நடித்து விருது வாங்கும் அளவிற்கு வெற்றி பெற்றார். அது மட்டுமல்லாமல் உடலை வருத்திக் கொண்டே இமேஜை கூட பெருசாக யோசிக்காமல் ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னுடைய நடிப்பு திறமையை விக்ரம் வளர்த்துக் கொண்டார். இவருடைய கடுமையான உழைப்பால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இவரும் இருந்து வருகிறார். அதேசமயம் அஜித்துக்கும் இவருக்கும் மேற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது வரை இவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…