தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் , இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் இந்த மாதம் இறுதியில் ஹிட்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். கௌதம் மேனன் மற்றும் சரண்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளனர். செப்டம்பர் 27ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை புரொமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு விஜய் ஆண்டனி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், பொதுவாகவே படத்தின் சூட்டிங் சமயத்தில் ஆக்சன் சீன் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். ரோப்பில் தலைகீழாக தொங்க வேண்டும். இதையெல்லாம் பார்த்து சார் நீங்க சூப்பரா செஞ்சீங்க பார்க்கவே வேற லெவலா இருந்துச்சு என பலரும் பாராட்டுவாங்க. ஆனா அந்த சீன்ல நம்ம உயிரை கைல புடிச்சிட்டு தான் இருக்கணும். ஆக்ஷன் சீனில் பல இடங்களில் நமக்கு தெரியாமல் அடிப்படும். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் கூட சண்டை போடும்போது முகத்தில் அடிபட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓய்வில் இருந்தேன்.
அந்த சம்பவத்தில் முகம் எல்லாம் வீங்கி என் கண் உள்ளே போய்விட்டது. சினிமாவுல ஆக்ஷன் சீன்ல ரொம்பவும் பயமாயிருக்கும். நமக்கு ஏதாவது ஆயுடுமோ என்கிறதை விட அப்படி ஒரு வேளை ஆயிட்டா படப்பிடிப்பு நின்று விடுமே என்ற வருத்தம் தான் இருக்கும். இருந்தாலும் எல்லாத்தையும் சமாளிச்சுக்கிட்டு அந்த இடத்துல நாம அதை பண்ணி தான் ஆகணும் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…