தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல தளங்களில் இயங்கி வருபவர் தம்பி ராமையா. வடிவேலுவுக்கு நகைச்சுவை டிராக் எழுதும் குழுவில் முக்கிய அங்கத்தினாராக இருந்தவர். அதனால் வடிவேலுவின் பல நகைச்சுவை காட்சிகளில் இவரைக் காணலாம்.
ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். மனுநீதி, கோவில்பட்டி வீரலட்சுமி, அருள், ஜோர், கோடம்பாக்கம், ஆறு, கோவை பிரதர்ஸ், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, சில்லுனு ஒரு காதல், தனி ஒருவன், சாட்டை, விஸ்வாசம், விநோதய சித்தம் சமீபத்தில் வெளியான லால் சலாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பத்தோடு பதினொன்றாக நடித்து வந்த தம்பி ராமையாவை முன்னணி நடிகராக்கியது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படம்தான். அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் பின்னர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால் அவர் பற்றி பலரும் அறியாத முகம் ஒன்று உள்ளது. அது அவர் ஒரு இயக்குனர் என்பதுதான். ஆம் தம்பி ராமையா இதுவரை 2 படங்களை இயக்கியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு முரளி, பிரதியுக்ஷா, நெப்போலியன் மற்றும் நாசர் நடிப்பில் அவர் மனுநீதி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரியளவில் பேசுபொருளாகவில்லை. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வடிவேலுவை கதாநாயகனாக்கி ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்” என்ற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கினார்.
அந்த படம் படுதோல்விப் படமாக அமைந்தது. அது பற்றி ஒரு நேர்காணலில் பேசும்போது “மாப்ள வடிவேலுவோடு முன்ன மாதிரி நெருக்கம் இல்லை. நான் இயக்கிய இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை வெற்றிப்படமாகக் கொடுக்கமுடியவில்லை. அதனால் எங்களுக்கு இடைவெளி விழுந்துடுச்சு.” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…