தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் சுரேஷ் கோபி.
மலையாளத் திரைப்பட நடிகரான சுரேஷ்கோபி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் பல திரைப்படங்களில் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவை விட இவர் மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கு நேற்று திருமணம் நிச்சயதார்த்தம் மிக எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் மிக எளிமையான முறையில் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மாவேலி கரையை சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை தான் இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ரேயாஸ், லோகாய் தோழர்களே என்று கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுரேஷ்கோபி மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பாக்யாவின் திருமணம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குருவாயூரில் திருமணம் நடைபெற உள்ளதால் ஜனவரி இருபதாம் தேதி திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.
சுரேஷ்கோபி மற்றும் ராதிகா தம்பதியின் மூத்த மகள் பாக்கியாவிற்கு தற்போது பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…