நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் பட சம்பளம் இவ்வளவு தானா?…. தீயாய் பரவும் தகவல் இதோ!…

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் பட சம்பளம் இவ்வளவு தானா?…. தீயாய் பரவும் தகவல் இதோ!…

நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்த முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இவருடைய படங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘பிரின்ஸ்’. ஆனால் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. தற்பொழுது இவர் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஒரு படத்தில் நடிக்க சுமார் 15 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இவர் தான் நடித்த முதல் படத்திற்கு ரூபாய் 10,000 மட்டும்தான் சம்பளமாக பெற்றாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam