Categories: சினிமா

இன்று தனது 39 வது பிறந்தநாள் கொண்டாடும் ‘குட்டி தளபதி’ நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து தற்பொழுது ரசிகர்களால் குட்டி தளபதி என கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இவர் தமிழில் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்ததாக வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புனையாக அமைந்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் , மான் கராத்தே,  பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள்  நல்ல விமர்சனங்களையே பெற்றது.

இதைத்தொடர்ந்து வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த வருட பொங்கலுக்கு ரிலீசான ‘அயலான்’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக இவர் sk 21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு சென்னையில் சொந்த வீடு உள்ள நிலையில், சமீபத்தில் தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் பிரம்மாண்ட புது வீட்டை கட்டினார்.

சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்பொழுது  110 கோடி சொத்து இருப்பதாகஇணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதோடு மட்டுமின்றி  நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி, அதன்மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago