#image_title
நடிகர் சிம்பு மற்ற நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தனக்கும் சம்பளத்தை இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கூறி வருவதால் தயாரிப்பாளர் ஷாக்காகி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இடையில் பல சர்ச்சைகளை சந்தித்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தமிழ் சினிமாவில் தொடங்கி இருக்கின்றார். அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இப்படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்திருந்தார்.
அதனால் அடுத்த படத்தை அவர் தயாரிப்பில் நடிக்கப் போவதாக நடிகர் சிம்பு கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் கமிட் ஆனார். ஆனால் அப்படத்தை அவர் இதுவரை நடித்துக் கொடுக்கவில்லை. இந்த படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்களும் இருந்தது. அப்படியே அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு 4.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை வாங்கி இருக்கின்றார்.
இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுக்காமல் இருந்ததால் இடையில் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். மேலும் சிம்பு நடிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கிடையில் நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புது திரைப்படத்திலும், அதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் உடன் தக்லைப் என்ற திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்த படத்தில் எல்லாம் நடிக்க கூடாது என்று ஐசரி கணேஷ் பிரச்சனை செய்து வந்த நிலையில் டைனோசர் என்ற திரைப்படத்தை பி ஆர் மாதவன் சிம்புவை வைத்து இயக்குவதாக அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கின்றார். ஆனால் தற்போது நடிகர் சிம்பு மீண்டும் தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.
அவர் தனது சம்பளம் தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் கராராக பேசி வருகிறார். அவர் தனக்கு போட்டியாக நடிக்கும் தனுஷுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கும் போது எனக்கும் 50 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் இடம் கேட்டுக் கொண்டிருக்கின்றாராம் இதனால் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றார் ஐசரி கணேஷ்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…