விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த சீரியல் அந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அதில் ஹீரோவாக நடிகர் செந்திலும் மற்றும் ஹீரோயினாக ஸ்ரீஜாவும் நடித்து இருந்தார்கள்.இந்த சீரியல் மூலம் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர்கள் இருவரும் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இந்த சீரியலுக்கு பிறகு நடிகர் செந்திலுக்கு வெள்ளித்திரை பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இவர் தவமாய் தவமிருந்து, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு என சில படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ‘மாப்பிள்ளை’ என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். மேலும் ‘கல்யாணம்: கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற வெப் சீரிசில் நடித்தனர். இதைத்தொடர்ந்து திருமணமாகி 9வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பம் அடைந்தார்.
சமீபத்தில் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் செந்தில். இவர் தற்பொழுது தனது குழந்தையுடன் கொண்டாடும் முதல் திருமண நாள் இது என்று கூறி எமோஷனலான பதிவு ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் பதிவு….
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும்…
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி மற்றும் கூட்டணி குழப்பங்கள்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சிக்குள்ளேயே அதிருப்தி கிளம்பியுள்ளதாகவும், அவர் தேர்தலுக்கு முன்பே மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள்…
தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான…
விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக்கோரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு SC-யில் விசாரணைக்கு…