#image_title
80ஸ் 90-ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சத்யராஜ். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். முதன் முதலாக வேதம் புதிது படத்தில் சத்யராஜ் நடித்தார். அதன்பிறகு வால்டர் வெற்றிவேல், மலபார் போலீஸ், குங்குமப்பொட்டு கவுண்டர், வில்லாதி வில்லன், நண்பன், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு, குரு சிஷ்யன், கோவை பிரதர்ஸ், தலைவா, ராஜா ராணி, அமைதிப்படை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
1995-ஆம் ஆண்டு வில்லாதி வில்லன் என்ற படத்தையும் சத்யராஜ் இயக்கி உள்ளார். லீக், நாய்கள் ஜாக்கிரதை, சத்யா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சத்யராஜ் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் சத்யராஜ் கூறியதாவது, சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை தக்க வைக்கவில்லை.
விளையாட்டுத்தனமாக இருந்து எல்லாத்தையும் விட்டுட்டேன். அப்பவே சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்திருக்க வேண்டும். என்னுடைய தவறான கணிப்பினால் வாய்ப்பை தவற விட்டேன். மேலும் எனது படங்களும் ஓடாமல் போனது. ரஜினி சார், கமல் சார், விஜயகாந்த், சத்யராஜ் அப்படின்னு ஒரு பீரியட் இருந்துச்சு. அப்பவும் பிரபு கார்த்திக் எல்லாரும் இருந்தாங்க. நான் மட்டும் இல்ல எல்லாரும் தங்களது இடத்தை தக்க வைக்க தவறிவிட்டார்கள். விஜயகாந்த் படத்திலிருந்து அரசியலுக்கு வந்தார்.
ரஜினி சார் கமல் சார் மாதிரி யாருமே எங்களுக்கு கிடைச்ச இடத்த தக்க வைக்காம இருந்துட்டோம். அதை விட்டதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரீசன் இருக்கலாம். எனக்கு இருக்க ரீசன் அமைந்த வாழ்க்கைய கட்டி காப்பாத்த தெரியல எனக்கு. அதுதான் உண்மை. விளையாட்டுத்தனமா இருந்தது ஒன்னு. இன்னொன்னு பலவிதமான படம் ஓடும் எந்த போது எந்த ரூட்ல போறதுன்னு தெரியாம போயிடுச்சு. அதை எப்படி தக்க வைக்கிறதுன்னு தெரியல. ரொம்ப விளையாட்டு தனமான புத்தியால் தவற விட்டுட்டேன் கூறியுள்ளார்.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…