தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவருடைய இயக்கத்தில் கலந்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவ்வாறு சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ஈசன் என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகின்றார்.
இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. அதன்படி தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நந்தன். இந்தத் திரைப்படத்தை சரவணன் இயக்கியுள்ள நிலையில் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சசிகுமார் நடிப்பில் கலந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தற்போது சசிகுமார் அளித்துள்ள பேட்டியில் விஜய் சேதுபதி பற்றிய விஷயத்தை கூறியுள்ளார். அதாவது, சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியை வேண்டாம் என்று நான் சொன்னேன். ஏனென்றால் அவர் அப்போது தான் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரை வில்லன் கதாபாத்திரத்திற்கு வேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். அப்பாவே நல்லா தெரியும் அவர் எல்லா கேரக்டரும் பண்ணுவார் என்று என சசிகுமார் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…