Categories: CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ராஜகுமாரனை தாக்கிய சரத்குமார், தடுத்த தேவயானி – வெளிச்சத்துக்கு வந்த காதல் விவகாரம்

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். தொடர்ந்து நீ வருவாய் என என்ற படத்தை எடுத்து இயக்குநராக மாறினார். அஜீத்குமார், பார்த்திபன், தேவயானி நடித்த இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. இந்த படத்தில், தேவயானிக்கும், அஜீத்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும். ஆனால் ஒரு காட்சியில் பைக்கில் வரும் அஜீத்குமார் விபத்தில் சிக்கி இறந்துவிடுவார். அதே விபத்தில் பஸ்சில் பயணித்து வருவார் பார்த்திபன். இந்த விபத்தில் கண்பார்வை இழந்த பார்த்திபனுக்கு அஜீத்குமாரின் கண்கள் பொருத்தப்படும் தனது காதலர் அஜீத்குமாரின் கண்கள் பொருத்தப்பட்டவர் என்பதற்காக, பார்த்திபனை தேவயானி நேசிப்பார். இதுதான் படத்தின் மையக்கரு.

இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த மற்றொரு படம்தான் விண்ணுக்கும் மண்ணுக்கும். இந்த படத்தையும் ராஜகுமாரன்தான் இயக்கினார். இந்த படத்தில் தேவயானி, ஒரு திரைப்பட நடிகை கேரக்டரில் வருவார். அவரை பொள்ளாச்சி ஜமீன்தார் சரத்குமாரின் தம்பி சியான் விக்ரம் காதலிப்பார். சரத்குமாரின் மனைவியாக குஷ்பு நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. அப்போது ஒருநாள் ஷூட்டிங்குக்கு சரத்குமார், சியான் விக்ரம் ஆகியோர் வந்துவிட்டனர். ஆனால், அவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்த நிலையில் அவர்களுக்கான காட்சிகள் படமாக்கப்படவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த சரத்குமார், ஒரு கட்டத்தில் அங்கிருந்த அசோசியேட் டைரக்டரை அழைத்து, எங்கே டைரக்டர் ராஜகுமாரன் எனக் கேட்டபோது, அவர் தேவயானி நடிக்கும் காட்சிகளை எடுத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

பயங்கர கோபத்துடன் சரத்குமார் அங்கு சென்ற போது தென்னை மரங்களுக்கு நடுவில், தேவயானியை வைத்து ஷாட் எடுத்துக்கொண்டிருந்தார் ராஜகுமாரன். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சரத்குமார், ராஜகுமாரனை கடுமையாக திட்டி தாக்கியுள்ளார். அங்கிருந்த தேவயானி வந்து தடுத்துள்ளார். படமே ட்ராப் ஆகும் அளவுக்கு பிரச்னையாக பின்னர்தான், படம் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் தோல்வியடைந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகுதான், ராஜகுமாரன் தேவயானியை சின்சியராக காதலிப்பதும், அவரது காதலை தேவயானியும் ஏற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஒருகட்டத்தில் தேவயானியும், ராஜகுமாரனும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். ஆனால் தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு வருகிறது. அதையும் மீறி, இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர் என்று, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் இந்த தகவல்களை கூறியிருக்கிறார்.

Sumathi
Sumathi

Recent Posts

தமிழ், மலையாளம் எல்லாம் இல்லையாம்.. ஸ்ட்ரெயிட்டா பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய கவின்.. வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் கவினின் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

8 நிமிடங்கள் ago

அட நம்ம கௌதம் கார்த்திக்கா இது..? மறைந்த பாலிவுட் நடிகர் போல மாறிட்டாரே..!!

பிரபல நடிகர் ஆன கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த…

10 நிமிடங்கள் ago

குடும்பத்தினருடன் சென்று பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…

3 மணி நேரங்கள் ago

பொண்ணு மாப்புள ஜோரு, ஒண்ணா சேருது பாரு.. கலைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் திருமணம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…

3 மணி நேரங்கள் ago

மஞ்ச காட்டு மைனா, என்ன கொஞ்சி கொஞ்சி போனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…

6 மணி நேரங்கள் ago

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…

7 மணி நேரங்கள் ago