நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் பல நடிகர்களோடு சிறுசிறு கேரக்டரில் நடித்து வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார். அதேசமயம் அவர் பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் அடிக்கடி பரவிக் கொண்டிருக்கிறது. சந்தானம் மற்ற நடிகர்களை அடிக்கடி உருவாகியது என்பது பிரபலமாகி கொண்டு தான் இருக்கிறது. இப்போது தான் பழைய மாதிரி காமெடி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் இனி அடுத்தவர்களை உருவ கேலி செய்வதுபோல கேரக்டரில் நடிக்க எனக்கு பிடிக்கவில்லை, ஆரம்பத்தில் நடித்தது பார்த்து இப்போ எனக்கே மாற்றம் தேவைப்படுகிறது என சந்தானம் தெரிவித்திருந்தார்.
டைமிங்க் காமெடி , வெரைட்டி வெரைட்டியாக கலாய்ப்பது என கவுண்டமணி , வடிவேலுவுக்குப் பின் பிரபல காமெடியனாக வலம் வந்தார். கதையே இல்லாத படமாக இருந்தாலும் சந்தானம் இருந்தால் அந்த படம் ஹிட் என்கிற நிலை ஏற்பட்டது. எப்போது நாயகனுக்கு நண்பனாக நடித்து வந்த சந்தானம் தானே ஹீரோவாகலாம் என முடிவு செய்தார். கண்ணா லட்டு திண்ண ஆசையா , தில்லுக்கு துட்டு , ஏ 1 இவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது சந்தானம் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் நெக்ஸ் லெவல் படம் மே 16 ஆம் தேதி இன்று வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் தன்னுடைய அப்பாவின் படத்தை பார்த்து படம் ரொம்ப நல்லா இருக்கு என்று சந்தானத்தின் மகன் நிபுன் தெரிவித்துள்ளார். சந்தானம் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…