தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். சமீபகாலமாக இவர் உடல் எடை குறைந்து காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இந்திரஜா.
இவர் அவ்வப்பொழுது தங்களது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஆண்டவரை (உலக நாயகன் கமலஹாசனை) சந்தித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
விரைவில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.சமீபத்தில் கூட நடிகர் ரோபோ ஷங்கரின் உடல்நிலையை விசாரிக்க வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் விசாரித்தார் கமல்ஹசன்.
அப்பொழுது ரோபோ ஷங்கர் விரைவில் தன் மகளுக்கு திருமணம் செய்ய இருப்பதாகவும், நீங்கள் தான் திருமணத்தை தலைமை ஏற்று நடத்த வேண்டும் எனவும், விரைவில் சந்தித்து திருமண பத்திரிக்கை தருவதாகவும் கூறி இருந்தார்.இதைத்தொடர்ந்து இவர்களின் சந்திப்பு தற்பொழுது நடந்துள்ளது.
எனவே விரைவில் இந்திரஜா ஷங்கர் அவர்களின் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நடிகை இந்திரஜா ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…