விஜய்யின் தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநாடு மதுரையில் விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் விஜய் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசினார். இந்த நிலையில் கோயம்புத்தூர் துடியலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித்திடம் விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, விஜய் மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசுகிறார். 2014-ஆம் ஆண்டு கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பூனை போல கையை கட்டி அமர்ந்திருந்ததை தம்பி மறந்து விட்டார் போல. இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் என்று பிரதமரை விமர்சனம் செய்யும் விஜய் அன்று எந்த மக்களின் பிரச்சினைக்காக மோடியை சந்தித்து பேசினார்? அவரின் தலைவா படம் ரிலீஸ் பிரச்சனை குறித்து பேச தான் அன்று காத்திருந்தார்.
பிரதமரை மிஸ்டர் என குறிப்பிடுகிறார். முதலமைச்சரை அங்கிள் என சொல்கிறார். அவரது மூளையில் ஏறுதோ பிரச்சனை உள்ளது. உங்களுக்கு அறிவு இல்லையா? இதுதான் அரசியல் நாகரீகமா? உலகமே வியந்து பார்க்கும் பிரதமராக மோடி இருக்கிறார். அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கு வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் போல இருக்கிறது. அதை வாக்கால் குத்தி வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என ரஞ்சித் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…