நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படம் நடிகர் விஜயகாந்த் எழுதப்பட்ட கதை என்று பழைய நேர்காணல் ஒன்றில் நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்த நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த நிலையில் வடிவேலு, சரோஜாதேவி, ஆனந்த் பாபு, பரத் முரளி, ரமேஷ் கண்ணா மற்றும் மனோபாலா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆதவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த திரைப்படத்தில் நடிகராக உதயநிதி ஸ்டாலின் சிறிய வேதத்தில் அறிமுகமாகி இருந்தார். ஆதவன் திரைப்படத்தின் கதை மற்றும் திரை கதையை நடிகர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் சூர்யா ஹீரோவாக கேஎஸ் ரவிக்குமார் கமிட் ஆகியுள்ளனர். ஆனால் இந்த படத்திற்கு சரியான கதை கிடைக்காமல் கே எஸ் ரவிக்குமார் தவித்துள்ளார்.
உடனே இது தொடர்பாக ரமேஷ் கண்ணாவிடம் அவர் பேசும்போது, தன்னிடம் ஒரு கதை இருப்பதாக கூறியுள்ளார். அந்த கதையை கேட்டதும் அனைவருக்கும் திருப்தியாக இருந்துள்ளது. அப்படித்தான் ஆதவன் திரைப்படம் உருவாகி உள்ளது. இது தொடர்பாக ரமேஷ் கண்ணா நேர்காணல் ஒன்றில் பேசிய போது, ஆதவன் படம் கேப்டன் விஜயகாந்த்க்கு எழுதப்பட்ட கதை. ஒரு நாள் விஜயகாந்த் என்னிடம், நான் ராவுத்தர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறேன், நீ ஒரு கதையை ரெடி பண்ணி அவரிடம் சொல் என்று கூறினார்.
உடனே அப்படி ஒரு கதையை ரெடி பண்ணி ராவுத்தர் கிட்ட சொன்னேன். அவருக்கு பிடித்த போக பொள்ளாச்சியில் விஜயகாந்த் இருப்பார் அவர் கிட்ட போய் சொல்லு என்று சொன்னார். நானும் கேப்டனை சந்தித்து கதை சொல்லி ஓகே ஆகிவிட்டது. ஆனால் காலம் மாற்றத்தால் அந்த கதை எடுக்க முடியாமல் போய்விட்டது. கடைசியில் சுமார் பத்து வருடங்கள் கழித்து சூர்யா நடிக்க ஆதவன் படமாக அந்த கதை உருவானது என ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…
வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…
சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.…
தமிழகத்தில் தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவும் வகையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று…