விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் சந்தானம் கவின் ரோபோ சங்கர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் தமிழ் சினிமாவுக்குள் வந்து இப்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். இதில் காமெடி ரோலில் பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் மட்டும் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். இந்நிலையில் ரோபோ சங்கர் திடீரென உடல்நலக்குறைவால் மறைந்து விட்டார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது உச்ச நட்சத்திரமாக உள்ளார். காமெடி ரோலில் நடித்த சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். கேபிஒய் பாலாவும் காந்தி கண்ணாடி படம் மூலம் ஹீரோவாகி விட்டார். கவின் பல படங்களில் நடித்து இளம் ஹீரோவாக வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து அடுத்ததாக ராமர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் ராமர். இப்போது அவர், சற்று நேரத்தில் தீர்ப்பு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி உள்ளது. அதை நடிகர் விஜய் சேதுபதி ரிலீஸ் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…