இந்திய சினிமா எத்தனையோ ஹீரோக்களை கண்டறிகிறது. சினிமா என்றாலே முதலில் ஹீரோ வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதனை முதலில் உடைத்து சினிமாவில் சாதித்து காட்டியவர் தான் ரஜினி. கருப்பான உருவம், சின்ன கண்கள் மற்றும் ஒல்லியான தேகம் என சினிமாவுக்குள் வந்த ரஜினி ஹீரோவான பின்னர் தான் கருப்பாக இருந்தாலும் ஹீரோ ஆகலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் மனதில் வந்தது. முதலில் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக சினிமாவில் நுழைந்த ரஜினி வில்லன் என்று பயணித்துக் கொண்டிருந்த கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். ஒழுங்காக தமிழ் பேச தெரியாமல் நடனம் ஆட தெரியாமல் இவரெல்லாம் எப்படி ஹீரோவாக நிலைப்பார் என்று பல விமர்சனங்கள் எழுந்தபோது தன்னிடம் எதையெல்லாம் குறையாக கூறினார்களோ அதில் எல்லாம் ஜெயித்து காட்டினார்.
இதனால் மெல்ல மெல்ல ரசிகர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. ஸ்டைல் என்ற பெயருக்கு ரஜினி என்று அர்த்தம் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய ஸ்டைலால் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியை ரஜினி பிடித்த நிலையில் அவர் இந்த இடத்திற்கு வந்ததற்கு முதல் காரணம் திறமை என்றால் மற்றொரு காரணம் அவருடைய எளிமை தான். எவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்றாலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பழகியவர்களை தற்போது மறக்காமல் உள்ளார். தற்போது 74 வயதாகும் ரஜினி சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதியாக வேட்டையின் திரைப்படத்தின் அவர் நடித்திருந்த நிலையில் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் ரஜினிகாந்த் நடித்த வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு மொழியிலும் இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவுக்கும் அப்போது கிடைக்காத அற்புதமான வாய்ப்பு ரஜினியின் கதவை தட்டியது. Dwight H.Little இயக்கத்தில் அசோக் அமிர்த்ராஜ் தயாரிப்பில் உருவான Blood Stone படத்தில் ப்ரெட் ஸ்டிம்லி ஹீரோவாக நடித்த இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது.
படத்தில் ஷியாம் ஷாபு என்ற கதாபாத்திரத்தில் கார் டிரைவராக ரஜினி நடித்திருப்பார். ஆங்கில படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் தமிழும் பேசி ரஜினி நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ஹாலிவுட்டில் முதல்முறையாக கால் பதித்திட வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும். அந்த வாய்ப்பு தமிழ் சினிமாவில் முதன் முதலில் நடிகர் ரஜினிக்கு தான் கிடைத்தது.
நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…