தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர். இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய அறக்கட்டளை மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். அவர் ரத்த வங்கி ஒன்றை நடத்தி வரும் நிலையில் அங்கு தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜசேகர் மற்றும் ஜீவிதா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளரும் ஆனால் அல்லு அர்ஜுன், சிரஞ்சீவியின் அறக்கட்டளை மற்றும் ரத்த வங்கி மீது ராஜசேகரும் ஜீவிதாவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 12 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையை தவறாக பேசியது நிரூபணம் ஆனதால் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியினருக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொகையை கட்டியதும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…